விஜய்யின் ’கில்லி ’ பட சீன்கள் காட்டி அட்வைஸ் செய்யும் திரிஷா.. ’ வில்லன் வண்டியிலேயே ஏறி அவன் இடத்துக்கு வரக்கூடாது..

டிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திரிஷா, விஜய்யுடன் நடித்த ’கில்லி’ பட கிளிப்பிங்ஸைத்தான் தனது இன்ஸ்டாகி ராமில் வெளியிட்டுள்ளார். தேர்வு செய்து சீன்களை வீடியோக்களாக தொகுத்து அதில், என்னெவெல்லாம் செய்யக் கூடாது என்று டயலாக் எழுதி இருக்கி றார். பிரகாஷ்ராஜிடன் இருக்கும் சீனை வெளியிட்டு, ’வில்லன் வண்டியிலேயே ஏறிஅவன் இருப்பிடத் துக்கு வரக்கூடாது எனவும், விஜய் ரவுடிகளுடன் மோதும் காட்சியை பகிர்ந்து, ’உனக்கு பின்னாலே யே வில்லன் ஆட்கள் இருக்கும்போது மயங்கி விழக்கூடாது’ என்றும்
விஜய் வீட்டில் ரகசியமாக தங்கிருக்கும் திரிஷா ஆசிஷ் வித்யார்த்தியுடன் இருக்கும் சீனை வெளியிட்டு,’மகளிடமே அவரது அப்பாவை அங்கிள் என்று அறிமுகப் படுத்தக்கூடாது, எனவும் அவசரமாக திரிஷாவை விஜய் ஜீப்பில் ஏற்றிச் செல்லும்போது, ’எப்போது பார்த்தாலும் சாப்பிட கார பூரி கேட்டுக் கொண்டிருக்கக்கூடாது’ எனவும் பதிவிட்டிருக்கிறார்.
இது விஜய் பட ’கில்லி’ வீடியோ என்ப தால் வைரலாகி வருகிறது.