திரிஷாவுக்கு என்ன ஆச்சு, ரசிகர்கள் குழப்பம்.. எதற்காக இப்படி  செய்தார்..

டிகை திரிஷா எப்போதும் சுறுசுறுப்பாக தன்னை வைத்திருப்ப துடன் தனது இணைய தள பக்கத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கொரோனா ஊரடங்கிலும் கவுதம் மேனன் இயக்கத்தில் ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தில் வீட்டிலிருந்தபடி சிம்புவுடன் செல்போனில் பேசுவதுபோல் நடித்தார்.


தனது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங் களில் தினம் தினம் பல்வேறு விஷயங் களை ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோழிகளுடன் இருக்கும் படங்களும், வெளிநாட்டு பயண படங்கள், டாட்டூ குத்திக்கொண்ட படங்கள் என வெரைட்டியாக பல நூறு படங்கள் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன் இணைய தள பக்கத்திலிருந்து தற்காலிக மாக விலகுவதாக அறிவித்தார். சில வாரங்கள் விலகி இருந்தவர் மீண்டும் இணைந்தார்.
தற்போது அதிர்ச்சி தரும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த நூற்றுக்கணக்கான படங்களை ஒரு நொடியில் நீக்கி விட்டு செலக்டிவாக 7 புகைப்படங்கள் மட்டுமே வைத்திருக் கிறார். திரிஷா மேற்கொண்டிருக்கும் இந்த திடீர் நடவடிக்கையால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.