செல்போன் ஹாக்..? த்ரிஷா – ஹன்சிகா கவலை..!

த்ரிஷா - ஹன்சிகா
த்ரிஷா – ஹன்சிகா

நடிகைகளின் செல்போன் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களை சிலர் அவ்வபோது ஹாக் செய்து திருடி வருகின்றனர். அப்படி சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா மற்றும் நடிகை ஹன்சிகா ஆகியோரின் செல்போனை ஹாக் செய்து அவர்களின் பர்சனல் விஷயங்களை நோண்டி பார்த்துவிட்டு அவர்களின் போன் காண்டாட்சை அழித்துவிட்டார்களாம்.. அடப்பாவிங்களா..

இதனால் கவலை அடைந்த த்ரிஷா உடனடியாக அவரின் பழைய நண்பர்களை தொடர்பு கொள்ள தனது சமூக வலைதளைத்தில் “என்னுடைய போன் எண் தெரிந்த உறவினர்களும்,நண்பர்களும் தங்களுடைய செல்போன் எண் மற்றும் பெயரை வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள். ஒரு வேலையில்லா கோழை என்னுடைய போனை ஹேக் செய்தது மட்டுமல்லாமல் அதிலுள்ள தகவல் அனைத்தையும் அழித்துவிட்டான்.” என தெரிவித்துள்ளார்.

மேடம் வேற எதுவும் மாட்டலையே..?