நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் மாரடைப்பால் மரணம்…..!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் வாணிஸ்ரீ.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.

பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் நேற்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். சென்னை செங்கல்பட்டு அருகில் உள்ள வீட்டில், அவர் தூக்கத்தில் இருக்கும் போது இறந்துள்ளார் என கூறப்படுகிறது .அது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான அபினய வெங்கடேஷ மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

சென்னையில் உள்ள அன்னபூர்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் மருத்துவ படிப்பை முடித்துள்ளார் அபினய வெங்கடேஷ கார்த்திக். அதன் பிறகு பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மனைவியும் மருத்துவர் தான். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அவர்களது இரண்டாவது குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகும் நிலையில் அபிநய் மரணமடைந்து இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்ட்டூன் கேலரி