சீனியர் நடிகையிடம் இரண்டரை கோடி நஷ்ட ஈடு கேட்டும் வனிதா.. பதிலுக்கு பதில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்..

டிகை வனிதா, பீட்டர்பால் திருமணம் சர்ச்சை யானது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, இயக்குனர் நாஞ்சில் விஜயன். சூர்யா தேவி ஆகியோர் திருமணம் பற்றி விமர்சித்தனர். அவர்கள் மீது வனிதா போலீசில் புகார் அளித்தார். இரு தரப்பும் யூடியூபில் கடுமையாக மோதிக் கொண்டனர்.


இதையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை வனிதாவிடம் ஒன்றேகால் கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அது குறித்து வனிதா விமர்சித்திருந்தார். இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நஷ்ட ஈடுகேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் வனிதா.
எனது தனிப்பட்ட வாழ்கையில் லட்சுமி ராமகிருஷ் ணன் தலையிட்டார். அவர் நஷ்ட ஈடாக இரண்ட ரை கோடி தர வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிட்டிருக்கிறார். யூடியூபில் மோதிக்கொண்டிருந்த நடிகைகள் தற்போது கோர்ட்டில் மோத தயாராகி வருகின்றனர்.