நடிகை வனிதா விஜயகுமார் வீட்டிலிருந்து வெளியேற்றம்

க்கிரமிப்பு புகாருக்கு உள்ளான நடிகை வனிதா விஜயகுமார் காவல்துறையினரால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தமிழ்த்திரைப்ட நடிகர் விஜயகுமாருக்கு சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் பங்களா ஒன்று உள்ளது. ஏராளமான அறைகளை கொண்ட இந்தப் பங்களா திரைப்பட படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டுவது வழக்கம்.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வீட்டை விஜயகுமார், தனது மகள் வனிதாவுக்குப் படப்பிடிப்புக்காக வாடகைக்கு கொடுத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்தும் வனிதா, வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜயகுமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவலர்கள் வனிதாவிடம் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் ஆலப்பாக்கம் வீட்டில் இருந்து வனிதா இன்று காலை வெளியேற்றப்பட்டார்.

இதற்கிடையே செய்தி சேகரிக்க அந்த வீட்டுக்குச் சென்ற செய்தியாளர்களை வனிதா கடுமையான வார்த்தைகளால் ஏசியது சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிலையில் தான் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் வனிதா.

அப்போது அவர், “வீட்டை காலி செய்யுமாறு என் அப்பா விஜயகுமார் மிரட்டினார். வேறு வாடகை வீட்டிற்கு செல்லுமாறும் வலியுறுத்தினார். 25,000 சதுர அடி அளவு கொண்ட வீட்டில் நான் வெறும் 1000 சது அடி அளவு உள்ள இடத்தில் இருந்தால் என்ன? வீட்டில் இப்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் என் தந்தை விஜயகுமார் என்னை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

ஏற்கனவே நான் 1995 களில் நடித்து சம்பாதித்த பணமும் இந்த வீடு கட்டுவதற்கு காரணம்.  ஆகவே  நான் இந்த வீட்டில் இருக்க உரிமை இருக்கிறது. ஆனாலும் காவலர்கள் என்னை அடித்து துன்புறுத்தி வெளியேற்றினர். நான் கடன் வாங்கி படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.  தவிர, விஜயகுமார்- மஞ்சுளா தம்பதிக்கு சட்டப்படியான வாரிசு நான். இந்த நிலையில் என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது தவறு” என்று நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.