Random image

உலக நாயகன் கமல் படத்தலைப்பில் நடிக்கும் வரலஷ்மி

சரத் குமார் மகளும், நடிகையுமான வரலஷ்மி நடிக்கும் புதிய படத்திற்கு உலக நாயகன் கமல் நடித்த திரைப்படத்தின் பெயர் வைக்கப்ப்பட்டுள்ளது.

varalakshmi

சிம்புவுடன் இணைந்து ” போடா போடி “ திரைப்படத்தில் நடைத்த சரத்குமார் மகள் வரலஷ்மி தன்பக்கம் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், பெண்கள் உரிமைகளுக்கு ஆதரவு அளித்தும் வந்தார்.

தற்போது தன் வசம் உள்ள 11 திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் வரலஷ்மி. இவர் சர்ஜூனின் ‘ எச்சரிகை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, சண்டக்கோழி 2, மாரி 2, சர்க்கார், கன்னிராசி, சக்தி, நீயா 2, அம்மாயி, வெல்வெட் நகரம், பாம்பன், காட்டேரி உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜே.கே. இயக்கும் படத்தில் வரலஷ்மி பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சாய் சமரத் மூவிஸ் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு 1981ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியன “ ராஜபார்வை “ என்ற பெயர் இடப்பட்டுள்ளது.

இப்படம் விக்ரம் வேதா பட இசையமைப்பாளார் சாம் சி.எஸ் இசையமைக்க, மேத்தீவ்ஸ் ஒளிப்பதிவில் தயாராகி வருகிறது.