நடிகை மானபங்கம்

 

 

புவனேஸ்வர்:

ஒடியா நடிகை உசாசி மிஸ்ரா தன்னை ஒரு முதியவரும், அவருடைய இரு மகன்களும் மானபங்கம் செய்ததாக காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

ஒடியா மொழி திரைப்பட மற்றும் இசை நாடக நடிகை உசாசி மிஸ்ரா, தன்னை ஒரு முதியவரும், அவருடைய இரு மகன்களும் மானபங்கம் செய்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தான்  ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் ஒரு இசை நாடகத்தில் நடிப்பதற்காக, காரில் சென்று கொண்டிருந்தபோது, வழியில், ஒரு கிராமத்தில் காரை நிறுத்திய ஒரு முதியவரும், அவருடைய 2 மகன்களும் தன்னை ஆபாசமாக திட்டி  அடித்தனர் என்றும்  தனது உடைகளை கிழித்து மானபங்கம் செய்தனர் என்றும் உசாசி தெரிவித்துள்ளார். பிறகு அங்கிருந்து தான் தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர், இசை நாடகத்தில் உசாசி மிஸ்ரா நடித்துக் கொண்டிருந்தபோது, அதே நபர், ஆட்களை திரட்டி வந்து நாடகத்தை நிறுத்தினார். காவல்துறையினரின் தலையீட்டுக்கு பிறகு, நாடகம் தொடர்ந்து நடந்தது.