நடிகை யாஷிகா தற்கொலை : காதலர் பிரிந்ததால் மனம் உடைந்தார்

சென்னை

திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை யாஷிகா தற்கொலை செய்து அவர் இல்லத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை யாஷிகாவின் உண்மைப் பெயர் மேரி ஷீலா ஜெபராணி ஆகும். இவர் திருப்பூரை சேர்ந்தவர். திரைப்பட ஆசையால் திருப்பூரை விட்டு சென்னை வந்துள்ளார். இவர் மன்னர் வகையறா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி பல டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் பெரம்பூரில் வசித்து வந்தார். அப்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்னும் மகேஷ் பாபு என்ற தொழில் அதிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் மிகவும் நெருக்கமாகி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வர தொடங்கினர்.

இந்நிலையில் அரவிந்த் மற்றும் யாஷிகா இடையே கருத்து வேற்றுமை உண்டாகி இருக்கிறது. இது நாளுக்கு நாள் வலுவடைந்துள்ளது. ஒரு கட்டத்தில் மோதல் அதிகமாகவே யாஷிகாவை பிரிந்த அரவிந்த் தனது வீட்டுக்கு திரும்பி சென்று விட்டார்.

இதனால் மனம் உடைந்த யாஷிகா யாருமில்லாத தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டு அவர் இல்லத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.