வயது மூப்பின் காரணமாக விளம்பரத்துறையின் குரு என்றழைக்கப்படும் அலிஹ் பதம்சீ மறைந்தார்!

விளம்பரத்துறையின் மூத்தப் படைப்பாளியான அலிஹ் பதம்சீ தனது 90வது வயதில் மரணமடைந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அலிஹ் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் மறைந்தார்.

guru

குஜராத் மாநிலம் குட்ச் பகுதியில் பிறந்தவர் அலிஹ் பதம்சீ. விளம்பர உலகின் உச்சத்தில் மிகச்சிறந்த படைப்பாளியாக கருதப்படுபவர் அலிஹ் பதம்சீ. இவரின் ஆலோசனை பேரியில் எடுக்கப்பட்ட விளம்பரம் நல்ல வரவேற்பை பெற்றன. அதன்படி, சர்ஃப் விளம்பரத்தில் வரும் லலிதாஜி, செர்ரி பிளாசம் ஷீ பாலீஸ் விளம்பரத்தில் வரும் செர்ரி சார்லி, எம்ஆர்எஃப் விளம்பரத்தில் வரும் வலுவான மனிதன், லிரில் விளம்பரத்தில் நீர் வீழ்ச்சியில் பெண் குளிப்பது, ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் என பல விளம்பரங்களுக்கு இவர் மூளையாக இருந்துள்ளார்.

விளம்பரத்துறையில் அலிஹ் பதம்சீ சிறந்து விளங்கியது காரணமாக மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. விளம்பரம் மட்டுமில்லாது, நாடகத்துறையிலும் அலிஹ் சிறந்து விளங்கினார்.
இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அலிஹ் பதம்சீ மும்பையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நத் கோவிந்தும், பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.