இலவச எரிவாயு சிலிண்டர் வேண்டுமா? ஆதார் அட்டை காட்டு- மத்தியஅரசு

டெல்லி-

இலவச எரிவாயு சிலிண்டர் தேவை என்றால் கண்டிப்பாக ஆதார் அட்டை இருக்கவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதிய உணவு உள்பட மத்திய அரசின் 30க்கும் அதிகமான நலத்திட்டங்களில் ஆதார் அட்டைகள் அவசியமாக்கப்பட்டுள்ளது.

இவற்றில் வறுமைக்கோட்டுக் கீழே வாழும் 1.67 கோடி ஏழைப்பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவதும் ஒன்றாகும்.  வறுமைக்கோட்டுக் கீழே வாழும் மேலும் 3.23 கோடி  பெண் பயனாளிகள் 2019 ம் ஆண்டுக்குள் பயன்பெறவேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதனால் ஆதார் அட்டையை இன்னும் பெறாத அந்தப்பெண்கள் வரும் மே 31ம்தேதிக்குள் பெயர்களை பதிவுசெய்து விடுங்கள் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.