அமலா பால் நடித்துள்ள ‘ஆடை’: ஜூலை 19-ம் தேதி ரிலீஸ் என அறிவிப்பு…!

அமலா பால் நடித்துள்ள ‘ஆடை’ படம், ஜூலை 19-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை . விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தணிக்கை அதிகாரிகள், ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ள இந்த படம் அடுத்த மாதம் (ஜூலை) 19-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி