நோட்டு செல்லாது முடிவு முன்பே அம்பானி, அதானிக்கு  தெரியும்!: சொல்கிறார்  பாஜக எம்.எல்.ஏ.

பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு, “500 மற்றும்  1000 ரூபாய் நோட்டு செல்லாது” என்று அறிவித்தார். இந்த முடிவு கருப்பு மற்றும் கள்ளப்பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.

இந்த முடிவு நாட்டின் நலனுக்காக ரகசியமாக வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதாக பா.ஜ.கவினர் சொல்கிறார்கள். ஆனால், பா.ஜ.க.வுக்கு நெருக்கமானவர்களுக்கு இந்த முடிவு பற்றி ஏற்கெனவே தகவல் கசியவிடப்பட்டது என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

999

இந்தநிலைில் ராஜஸ்தான்மாநிலத்தின் பா.ஜ.க. எம்.எல்.ஏ, பாவானி சிங், “ 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து அதானி, அம்பானி ஆகியோருக்கு முன்பே தெரியும். ஆகவே அவர்கள் தப்பி விட்டார்கள்” என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்கள்.

பா.ஜ.க, எம்.எல்.ஏ.வே இப்படி கூறியிருப்பது, மத்திய அரசின் மீதான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.