அம்பானி – அதானியின் சொத்துக்களின் அபரிமித வளர்ச்சி !

டில்லி

தானி மற்றும் அம்பானியின் சொத்து மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது.

அதானி குழுமத்தின் தலைவராக உள்ளவர் கௌதம் அதானி.   ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளவர் முகேஷ் அம்பானி.    இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர்களில் முதன்மையானவர்கள் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் ஆவார்கள்.  கடந்த 2017 ஆம் வருடம் தொழிலதிபர்களின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது.   இந்த தகவலை “எகானாமிக் டைம்ஸ்”  ஆங்கில ஏடு வெளியிட்டுள்ளது.

கடந்த 2017ஆம் வருடம் டிசம்பர் வரையிலான கணக்குப்படி  அதானியின் சொத்து மதிப்பு 124.6% உயர்ந்துள்ளது.    வருட ஆரம்பத்தில் $4.6 பில்லியனாக இருந்த அவர் சொத்து வருட இறுதியில் $10.4 பில்லியன் ஆகி உள்ளது.  அதாவது இந்திய ரூபாயில் 29,767 கோடியில் இருந்து ரூ, 67,097 கோடியாக உயர்ந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இதே கலகட்டத்தில் 77.53% உயர்ந்துள்ளது.   அதாவது $22.7 பில்லியனாக இருந்த சொத்துக்கள் வருட இறுதியில் $ 40.3 பில்லியன் ஆகி உள்ளது.   இந்திய ரூபாயில் ரூ.2,83,591 கோடியாக இருந்த சொத்துக்கள் வருட இறுதியில் ரு. 6,22,840 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகச் செல்வந்தர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 20ஆவது இடத்தில் இருக்கிறார்.