டில்லி

தானியின் சர்ச்சைக்குரிய பண மோசடி செய்தியை அடுத்து பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் அக்கட்சியின் ஐடி குழு மீது சுப்ரமணியன் சாமி குற்றம் கூறி உள்ளார்.

சுப்ரமணியன் சாமி தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களால் எதிர்க்கட்சிகளை மட்டுமின்றி தனது சொந்தக் கட்சியான பாஜகவினருக்கும் சங்கடமான நிலையை வரவழைப்பது வழக்கமாகும்.   அவர் சுமார் 2 வருடங்களுக்கு முன்பு அதானி உள்ளிட்டோர் மீது கடும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பி இருந்தார்.   அப்போது அவர் நிலக்கரி இறக்குமதியில் அதானி கடும் ஊழல் புரிந்ததாகக் குற்றம் சாட்டி இருந்தார்.  அதற்கு பாஜக ஐடி குழு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் “அதானி குழுமம் ஷெல் நிறுவனங்கள் மூலம் சுமார் 14.56 மில்லியன் டாலருக்குச் சந்தேகத்துக்குரிய வகையில் மின்னணு பணப் பரிவர்த்தனை செய்துள்ளதாகச் செய்திகளை வெளியிட்டது.  ஆனால் அந்த பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்டு நடந்ததாக அந்நிறுவனத் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சாமி தனது கட்சியின் ஐ டி குழுவினர் ரவுடித்தனமாக நடப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.  அப்போது அவர் பாஜக ஐடி குழு தலைவர் அமித் மாளவியா மிகவும் மோசமான மற்றும் ஆட்சேபத்துக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாகக் குற்றம் சாட்டி  அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் புருஷோத்தமர்கள் நிறைந்த பாஜகவில் இவரைப் போல் ராவணனும் துச்சாதனனும் இருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அதானி குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது  அதை ஒட்டி சுப்ரமணியன் சாமி தனது டிவிட்டரில், “”நான் இரு வருடங்களுக்கு முன்பு அதானியின் மோசமான நிதி நடவடிக்கைகள் குறித்துக் குறிப்பிட்ட போது பாஜக ஐடி குழுவின் நிழல் மனிதர்கள் என்னிடம் கூச்சல் போடன்ர்.  இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அதானி மீதான அமெரிக்க விசாரணையில் அவர் நிறுவனம் நடத்திய சந்தேகத்துக்குரிய பண மோசடி உள்ளிட்டவை குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளது” எனப் பதிந்துள்ளார்.

இதையொட்டி சமூக ஊடகங்களின் பாஜக ஆதரவாளர்கள் சாமியை கடும் வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர்.  பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு செய்து வரும் சாதனைகளை தன் வசமாக்க சுப்ரமணியன் சாமி இவ்வாறு கூறுவதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.