சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளித் துறைமுகத்தை கைப்பற்றிய மோடி நண்பர் நிறுவனம்

சென்னை:

சென்னை எண்ணூர் அருகே உள்ள காட்டுப்பள்ளித் துறைமுகத்தை மோடியின் நண்பர் நிறுவனமான அதானி குழுமம் கைப்பற்றி உள்ளது.

சென்னையை அடுத்து எண்ணூர் அருகே செயல்பட்டு வந்த தனியார் துறைமுகமான  காட்டுப்பள்ளி துறை முகத்தை எல் அன்டு டி நிறுவனத்திடம் இருந்து ரூ.1,950 கோடிக்கு  குஜாராத்தைச் சேர்ந்த அதானி குழுமம். விலைக்கு வாங்கியுள்ளது

சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைல் எண்ணூடர் அருகே  காட்டுப்பள்ளி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் முக்கிய  ஏற்றுமதி, இறக்குமதிக்கு முக்கியத் தளமாக இருந்து வருகிறது. இந்த துறைமுகத்தை தற்போது மோடியின் நண்பர் நிறுவனமான அதானி குழுமம் கைப்பற்றி உள்ளது.

இது தொடர்பாக அதானி குழுமத்திற்கும்  துறைமுக நிறுவனமான மரைன் இன்ப்ரா டெவலப்பர்ஸ்(எம்ஐடிபிஎல்) நிறுவனத்துக்கும்  இடையே ஒப்பந்தம் கையொப்பமாகி இருக்கிறது. லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தின் 97 சதவீத பங்குகளை முறைப்படி அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (ஏபிஎஸ்இஇசட்) வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி துறைமுகத்திற்கான ரூ.1950 கோடியில் ரூ,1562 கோடியை எம்ஐடிபிஎல் நிறுவனத்துக்கும்,  ரூ.388 கோடி பங்குகள் கொள்முதலிலும் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.. காட்டுப்பள்ளி துறைமுகத்தை எம்ஐடிபிஎல் நிறுவனம்தான் கடந்த 2016, ஜனவரி22-ம் தேதியில் இருந்து இயக்கி வருகிறது.

இதை உறுதிப்படுத்திய  அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கரண்,  காட்டுப்பள்ளி துறைமுகத்தை  தென் இந்தியாவில் மிகப்பெரிய துறைமுகமாக  நவீனப்படுத் தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். காட்டுப்பள்ளி துறைமுகம் அடுத்த 3 ஆண்டுகளில் 4 கோடி டன் சரக்குகளைக் கையாளும் அளவுக்குத் துறைமுகத்தை நவீனப்படுத்தவும், கட்டுமானத்தை எழுப்பவும் முடிவு செய்திருப்பகவும், இந்த துறைமுகம் மூலம், கண்டெய்னர்கள், ஆட்டோமொபைல், மிகப்பெரிய அளவிலான பொருட்கள், திரவப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் கையாள திட்டமிட்டு இருக்கிறோம் என்றும் கூறி உள்ளார்.

அதானி குழுமம் ஏற்கனவே கேரளாவில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் அந்த மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் துறைமுகத்தை சர்வதேச அளவில் ஆழப் படுத்த ரூ.4,089 கோடி செலவிடுகிறது . அதானி குழுமம் ஏற்கனவே முந்த்ரா, தாஹே, மர்மகோவா, விசாகப் பட்டிணம் உள்பட  7 துறைமுகங்களை நிர்வகித்து வரும் நிலையில் தற்போது சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தையும் கைப்பற்றி உள்ளது.