போதை: விமானம் ஓட்டச் சென்ற அமெரிக்க விமானிகள் கைது!

america1தையில் விமானத்தை ஓட்ட வந்த அமெரிக்க விமானிகள் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்க ஏர்லைன்சுக்கு சொந்தமான UA162 என்ற விமானம் 141 விமானிகளுடன் ஸ்காட்லாந்து கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் நியூஜெர்சிக்கு நேற்று காலை 9 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.
இந்த விமானத்தை ஓட்ட வந்த விமானிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து,  அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் இரு விமானிகளும் மது அருந்தியது  சோதனையில் தெரியவந்தது. இதனால் அவர்களை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து மாற்று விமானிகள் மூலம் விமானம் இயக்கப்பட்டு பயணிகள் சென்றனர்.

ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம்  கனடாவைச் சேர்ந்த இரண்டு விமானிகள் மது அருந்தி விமானம் ஓட்ட வந்தது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்காட்லாந்தின் ரெயில்வே மற்றும் போக்குவரத்து சட்டத்தின்படி, அதை இயக்கும் நபர்களின் ரத்தம் அல்லது சிறுநீர் சோதனையில் அவர்கள் மது அருந்தியது தெரியவந்தால், அவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள்.

கார்ட்டூன் கேலரி