சென்னை: கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் 20 சதவீதம் இடங்களை அதிகரிக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கும் வகையில், கல்லூரிகளில் ஆன்லைன் அடிமிஷன் நடைபெற்று வந்தது.

நடப்பாண்டில்,  அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் கலை பாடப்பிரிவுகளுக்கு கூடுதலாக 20 சதவீதமும், அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கேற்ப கூடுதலாக 20 சதவீதமும் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

2020-21ம் கல்வியாண்டில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாகவும்,  கூடுதல் சேர்க்கைக்கு சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.