கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சைக்கு கூடுதல் பதவி!

லாஸ்ஏஞ்சலிஸ்: கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் சுந்தர் பிச்சை.

Search engine சேவையில் உலகின் முன்னணி நிறுவனம் கூகுள். மேலும், தேடுபொறி, சர்வர், தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, ஏற்கனவே, இந்த கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்த நியமனம் உலகளவில் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், கூகுள் நிறுவன நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரைன் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்புடன், அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பையும் சுந்தர் பிச்சை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.