நாடாளுமன்ற தேர்தல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகளாக மேலும் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை:

நாடு முழுவதும் விரைவில் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்தியபிரதா சாகு இருக்கும் நிலையில், மேலும் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை கூடுதலாக தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியிமித்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, மாதிரி வாக்குப் பதிவுகளும் நடைபெற்று  வருகின்றன. இந்த நிலையில் சத்தியபிரதா சாகுக்கு துணையாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பாலாஜி, ராஜாராமன் ஆகியோரை கூடுதல் தலைமை  தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஓராண்டுக்கு  கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக செயல்படுவார்கள் என தமிழக அரசு  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.