டி.ஜி.பி. அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நேற்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பதினோரு போராட்டக்காரர்கள் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுதும் பதடத்தை ஏற்படுத்தி உள்ளது. பல பகுதிகளில் துப்பாக்கிச்சூடுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன. டாஸ்மாக் மதுக்கடை ஒன்று சூறையாடப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரை, மற்றஉம் டிஜிபி அலுவலகத்தில் துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து இரு இடங்களிலும் மூன்று3 கூடுதல் ஆணையர் தலைமையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .