டெஸ்ட் தொடர்: அசத்தலான பந்து வீச்சால் வெற்றியின் விளிம்பில் உள்ள இந்திய அணி!

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 4விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியை கைப்பற்ற நாளைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி 219 ரன்கள் எடுக்கும் கட்டாயத்தில் உள்ளது.

indian

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி மோது முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 15 ரன்கள் முன்னிலை வகித்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 307 ரன்கள் சேர்த்திருந்தது. இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இதில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி ரன் எடுக்கமுடியாமல் திணறியது. அந்த அணியின் ஆரோன் பின்ச் 11 ரன்களிலும், ஹாரில் 26 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 8 ரன்களிலும், பீடர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்திய அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த முதல் டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நாளை மட்டுமே நடைபெற உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற 219 ரன்கள் தேவை. எனினும் முதல் டெஸ்ட் போட்டியை கைப்பற்றும் நோக்கில் இந்திய அணியும், ஆஸ்திரேலியாவும் விளையாட உள்ளதால் நாளைய போட்டி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.