டெல்லி:

லைநகர் டெல்லி மாநில பாஜக தலைவராக மனோஜ் திவாரி மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு  பதிலாக டெல்லி பாஜக தலைவராக ஆதேஷ் குமார் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  டெல்லி மாநில பாஜக தலைவராக இருந்த திவாரி மாற்றப்பட்டுவதாகவும், அவருக்கு பதிலாக டெல்லி மாநகராட்சியின் (என்.டி.எம்.சி) முன்னாள் மேயரும், மேற்கு படேல் நகரைச் சேர்ந்த கவுன்சிலராகவும் இருந்த ஆதேஷ்குமார் குப்தா டெல்லி மாநில பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் குப்தா மாநில தலைவர்  பதவியை உடனே ஏற்றுக்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   பாஜக தலைமையின் இந்த திடீர் அறிவிப்பு பாஜக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் திவாரி மாற்றப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

மனோஜ்திவாரி ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம்  நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது மாநில பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையில்தான் சட்டமன்ற தேர்தல் பிரசாரமே பரபரப்பாக நடைபெற்றது. இருந்தாலும், டெல்லியின் 70 சட்டமன்ற இடங்களில்   ஆளும் ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி)62 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தது. , அதே நேரத்தில் பாஜக8 இடங்களை கைப்பற்றி  இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

மேலும்,  மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ, என்ஆர்சி போன்ற சட்டத்திற்கு எதிரான போராட்டக்களின் போதும், ஷாஹீன் பாக்  போராட்டத்தின்போது, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி, தலைநகரில் பரபரப்பை உருவாக்கியவர். இந்த நிலையில், திடீரென அவர் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.