மருத்துவமனையில் கங்குலி – பதறிப்போய் விளம்பரங்களை நிறுத்திய அதானியின் நிறுவனம்!

கொல்கத்தா: இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஃபார்ச்யூன் ரைஸ் பிராண்ட் சமையல் எண்ணெய் விளம்பரத் தூதர் என்ற பொறுப்பிலிருந்து கங்குலி விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதயத்திற்கு நலமானது என்று விளம்பரம் செய்தவரே, தற்போது இருதய நோயால் படுத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கிண்டல்கள் எழுந்ததால் இந்த முடிவு உடனடியாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கங்குலி நடித்து ஒளிபரப்பாகி வந்த விளம்பரங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த எண்ணைய்க்கான புதிய வகை விளம்பரப் படத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கடந்தாண்டு ஜனவரி மாதத்தில், இந்த தயாரிப்பின் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டார் செளரவ் கங்குலி. அந்த எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் இருதய ஆரோக்கியம் குறித்து பேசுவதுதான் இந்த விளம்பரத்தின் பிரதான அம்சம்.

இந்நிலையில், விளம்பரத் தூதுவரே, பல்வேறு காரணங்களால் இதய நோயில் படுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. எனவேதான், பதறிப் போயுள்ளது அதானியின் நிறுவனம்.

 

 

You may have missed