தைரியத்துக்கும் தந்திரத்துக்கும் வித்தியாசம் தெரியாத அதானி குழுமம்

குவீன்ஸ்லாந்து

தானி குழுமத்தின் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் பெயர் தவறான பொருள் கொண்டதாக அமைந்துள்ளது.

அதானி குழுமம் உலகெங்கும் பல சுரங்க நிறுவனங்களை நடத்தி வருகிறது.  அவ்வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மத்திய குவீன்ஸ்லாந்து பகுதியில் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்க பணிகளை இந்த குழுமம் நடத்தி வருகிறது.   இந்த ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு அதானி குழுமம் ப்ரேவஸ் எனப் பெயர் இட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவன தலைமை அதிகாரி டேவிட் போஷாஃப் தெரிவிக்கையில் ”இந்த பெயர் நமது நிறுவனத்துக்கு மிகவும் பொருத்தமான பெயர் ஆகும்.  .ஏனெனில் நமது நிறுவனம் பல தைரியமான முடிவுகளால் இப்போதுள்ள இடத்துக்கு வளர்ந்துள்ளதால்  தைரியம் என லத்தீன் மொழியில் பொருள் வரும் பெயர் வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக மையத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் பிஷப், “அவர்கள் வைத்துள்ள பெயர் தவறானது.    லத்தீனில் ப்ரேவஸ் என்பதற்குத் தைரியம் எனப் பொருள் அல்ல.   ஆங்கிலத்தில் தைரியத்தை ப்ரேவ் என சொல்வதை வைத்து அவர்கள் இவ்வாறு முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்த சொல்லுக்குத் தந்திரம் எனப் பொருளாகும்.   குறிப்பாக வியாபார தந்திரத்தை இவ்வாறு சொல்வார்கள்.  ஒரு சில பகுதிகளில் மற்றவர்களுடைய வியாபாரத்தை கெடுப்பதை லத்தின் மொழியில் ப்ரேவஸ் எனக் குறிப்பிடுவது வழக்கமாகும்.   உண்மையில் தைரியம் என்பதற்குச் சரியான லத்தின் சொல் ஃபோர்டிஸ் ஆகும்.” எனத் தெரிவித்துள்ளனர்.

அதானி குழுமத்தின் அதிசயப் பெயர் ஆஸ்திரேலியாவில் அனைவரும் நகைக்கும் நிலையை உண்டாக்கி உள்ளது.