ஆதித்யா வர்மா பாடல் காட்சிக்காக போர்ச்சுகல் செல்லும் படக்குழு…!

துருவ் விக்ரம் நடித்து வரும் ஆதித்யா வர்மா படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு போர்ச்சுகல் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழில் பாலா ‘வர்மா’ என்ற டைட்டிலில் இயக்கினார். இந்நிலையில் இப்படத்தை தயாரித்த இ4 என்டர்டெயின்மென்ட் கைவிட்டதாகவும் மேலும் புதிய படக்குழுவுடன் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுருந்தது.

அதை தொடர்ந்து இயக்குநர் கிரிசய்யா இயக்கத்தில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் மீண்டும் எடுக்க திட்டமிட்டு, படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இதில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாகப் பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக இம்மாத தொடக்கத்தில், அப்படக்குழுவினர் போர்ச்சுகல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: athithya varma, Dhruv Vikram, Portugal, ‘Arjun Reddy’
-=-