துருவ் விக்ரம் in ‘ஆதித்ய வர்மா’ – திரை விமர்சனம்

‘கட்டுத்தறி காளை’யாக சுதந்திரமாக சுற்றி திரிய நினைக்கும் ஒரு இளைஞனுக்கு ஒரு பெண் மேல் ஏற்படும் ஈர்ப்பை சொல்லும் ‘காதல்’ படம்.

 

கட்டுத்தறி காளை ஆதித்ய வர்மாவாக சிறப்பாக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம். துருவ் விக்ரம் இது அவருக்கு முதல் படம் என்று கூறமுடியாத அளவுக்கு நடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

 

துருவ் விக்ரம், நடிகர் ‘சீயான்’ விக்ரமின் மகன் என்பது படத்தை பார்க்கும் அனைவருக்கும் சொல்லாமலே தெரிந்துவிடும்.

 

இந்த படத்திற்கு ஏன் ‘’ சான்று வழங்கியிருக்கிறார்கள் என்பதை நியாயப்படுத்தியிருக்கிறது கதையும், கதை களமும், காட்சி படுத்தியவிதமும். ஹீரோயினாக தன் பங்கிற்கு என்ன செய்யமுடியுமோ அதை சிறப்பாக செய்திருக்கிறார் பனிடா சந்து.

 

ஹீரோயின் பனிடா சந்து இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்த இந்தியர், மாடலிங் மற்றும் பாலிவுட் படங்களில் தோன்றியிருக்கிறார்.

 

மருத்துவ கல்லூரியில் பயிலும் ஆதித்யா தனக்கு ஜூனியராக வந்து சேரும் மீரா மீது ஏற்படும் ஈர்ப்பால்,  இருவரும் ‘இணைந்து’ சுற்றுகிறார்கள். கல்லூரியை முடித்து வெளியே வருகிறார்கள்.

 

மகள் மீராவின் காதலை அறிந்த தந்தை வேறுஇடத்தில் திருமணம் செய்துவைக்கிறார், இதை தெரிந்துகொள்ள முடியாத நிலையில் ஹீரோ போதை மயக்கத்தில் இருக்கிறார்.

 

பின்னர் ஹீரோவுக்கு தெரியவரும்போது இரு வீட்டிலும்  நடக்கும் நிகழ்வுகளில் ஹீரோ வீட்டை விட்டு வெளியேறுகிறார், தேவதாஸ் ஆகிறார். ஆதித்யாவின் நண்பராக வரும் அன்பு தாசன் வெகுவாக கவர்கிறார்.

 

தான் மருத்துவராக வேலை செய்யும் இடத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கு பின், மது மயக்கத்தில் வேலை செய்தது நிரூபணமாகி, ஊடகங்களில் செய்தி வர, ஹீரோ வின் குடும்பம் அவரை அனுசரிக்க, ஹீரோ வுக்கு மருத்துவராக பணிபுரியும் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது.

 

இந்த நிலையில் மீராவை தற்செயலாக சந்திக்க, தனக்கு திருமணம் ஆனபோது ஆதித்யா போதை மயக்கத்தில் இருந்ததையும், திருமணம் ஆனவுடன் வீட்டை விட்டு வெளியேறியதையும், தான் வயிற்றில் இப்பொழுது சுமந்து கொண்டு இருப்பது ஆதித்யாவின் வாரிசு என்பதையும் சொல்ல, படம் முடிகிறது.

 

துருவ் விக்ரம், மற்றும் இயக்குனர் கிரீசாயா இருவருக்கும் இது முதல் படம். இரண்டாவது பாதியில் இயக்குனர் சற்று அவசரப்பட்டு இருக்கிறார். முதல் பாதியில் ‘காதல்’ காட்சியை இயக்குவதில்  இருந்த ஈடுபாடு பின்பாதியில் சற்று குறைவாகவே தோன்றுகிறது.

 

மீராவுக்கு திருமணம் ஆனது முதல் ஆதித்யா வேலை இழப்பது வரை 200 நாட்கள் வேலை செய்திருக்கிறார் என்றும் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதையும் நியாயப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சி, ஜூனியர் சீனியர் இருவரும் ஒரே நேரத்தில் கல்லூரி படிப்பை எப்படி முடித்தார்கள் என்ற கேள்வியை மறந்தது ஏனோ.

 

துருவ் விக்ரம், நன்றாக நடித்திருந்த போதிலும் குறைவான பார்வையாளர்களையே சென்று சேரக்கூடிய ‘’ சான்று பெற்ற ஒரு கதைக்களத்தில் நடித்தது சற்று வருத்தமே.

 

மொத்தத்தில் பிறந்தநாள் எதுவென்று கூட பரஸ்பரம் பேசிக்கொள்ளாமல் கண்டதும் மோகம் கொள்ளும் ‘காதல்’ கதை