தனுஷ் உடன் புதிய படத்தில் இணையும் அதிதி ராவ் ஹைதாரி

பிரஜாபதி  படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தவர் அதிதி ராவ் ஹைதாரி . இவர் ஏற்கெனவே மணிரத்னத்தின் காற்றுவெளியிடை படத்தில்  நடித்ததன் மூலம் பிரபலமானார். அதையடுத்து, இப்போது மீண்டும் செக்கச்சிவந்த வானம் படம் மூலம் மணிரத்னம் படத்தில் இணைந்துள்ளார்.

இரண்டாவது முறையாக இவரை மணிரத்னம் தன் படத்திற்கு தேர்வு செய்திருக்கிறார். ஆகவே அதிதி மேல் சினிமாதுறையினரின் பார்வை மீண்டும் திரும்பி உள்ளது.

இந்த நிலையில் தனுஷின் புதிய படத்தில் அதிதிராவ் ஹைதாரி நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக கூறப்படு கிறது. இதை அதிதிராவ் உறுதிப்படுத்தி உள்ளார். தனுசுடன் பிக்  படத்தில் தான் நடிக்க இருப்பதாகவும், இதன் காரணமாக தனக்கு மிகவும் சந்தோஷம் என்று கூறி உள்ளார்.

அதிதி ராவ் ஏற்கனவே ஓஷமுங் குமார், சஞ்சய் லீலா பன்சாலி போன்றவர்களுடன் இணைந்து பாலிவுட்டில் பணியாற்றியவர். மேலும் மலையாளம், தெலுங்கு, மராத்தி படங்களிலும் நடித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி