லாக்டவுனில் வீட்டில் களரி பயிற்சி செய்யும் அதிதி ராவ்…..!

 

கொரோனா வைரஸ் தொற்று மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர்.

சினிமா நட்சத்திரங்களும் பெரும்பாலும் சமூகவலைத்தளத்திலேயே பொழுதை கழிக்கின்றனர் .

ஊரடங்கால் வீட்டில் இருக்கும் நடிகை அதிதி ராவ் தான் ஃபிரீயாக இருக்கும் நேரத்தில் களரி பயிற்சி எடுத்து வருகிறார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் அதிதி வெளியிட்டுள்ளார்.

தனது கால்களை தூக்கி மேலே இருக்கும் கைகளை தொடும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது வரை ஆறு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அந்த விடியோவை பார்த்துள்ளனர்.