சித்தார்த்தின் ‘மஹா சமுத்திரம்’ படத்தின் நாயகியாக அதிதி ராவ் ஒப்பந்தம்…..!

சித்தார்த் சர்வானந்த் நடிப்பில் உருவாகவுள்ள ‘மஹா சமுத்திரம்’ படத்தின் நாயகியாக அதிதி ராவ் ஹைதரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘ஆர்.எக்ஸ்.100’ படத்தின் இயக்குநர் அஜய் பூபதி இப்படத்தை இயக்கவுள்ளார் . இந்தப் படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

கலந்த ஆக்‌ஷன் கதையாக உருவாகும் இப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.