”துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து அதிதி ராவ் விலகியதால், அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பு சுமார் 50% வரை முடிந்துவிட்டது.
ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார்.
கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமான போது, அதிதி ராவ்விடம் தேதிகள் இல்லை. இதனால், ‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து அதிதி ராவ் விலகிவிட்டார்.
‘சங்கத்தமிழன்’ படத்தில் விஜய் சேதுபதி – ராஷி கண்ணா கூட்டணி ஏற்கனவே இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.