அகில இந்திய பாரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் சென்னையை சேர்ந்த ஆதித்யா தங்கம் வென்று சாதனை

அகில இந்திய பாரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் சென்னையை சேர்ந்த ஆதித்யா கிரி 10 மீட்டர் ஏர் ரைபிள் புரோன் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

adithya

28-வது அகில இந்திய ஜிவி மவ்லாங்கர் பாரா துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை ஆவடியில் நடைபெற்றது. இதில் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஆதித்யா கிரி, ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் புரோன் பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டான்டிங் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினார்.

இதற்கு முன்னதாக மதுரையில் நடைபெற்ற மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற ஆதித்யா கிரி, 2 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருந்தார். இதனால் அவர் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கும் தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், இந்தியா சார்பில் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பதையே தனது பிரதான இலக்கு என ஆதித்யா கிரி கூறியுள்ளார்.