‘தடம்’ இந்தி ரீமேக்கில் ஆதித்யா ராய் கபூர் ஒப்பந்தம்….!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய், ஸ்மிருதி வெங்கட், தன்யா ஹோப், வித்யா ப்ரதீப், சோனியா அகர்வால், பெப்ஸி விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தடம்’.

’தடம்’ திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்தி ரீமேக்கில் ஷாஹித் கபூரூம், தெலுங்கு ரீமேக்கில் ராம் போத்தினேனி நாயகனாக நடிக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் பூஷன் குமார் தடத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியிருந்தார். இப்படத்தில் நடிக்க ஆதித்ய ராய் கபூரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆதித்ய ராய் கபூர் இதுவரை இரட்டை வேடங்களில் நடித்ததில்லை. மேலும், படத்தின் கதை அவருக்கு பிடித்துப்போக உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். சித்தார்த்துடன் நடிகை மிருணாள் தாக்கூரையும் ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர் இந்தப் படத்தில் நீடிப்பார் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. அறிமுக இயக்குநர் வர்த்தன் கேட்கர் இந்த ரீமேக்கை இயக்குகிறார்.