‘கஜா’ காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் 22ந்தேதி நடைபெறும்: அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை:

ங்கக்கடலில் உருவாகி உள்ள கஜா புயல் காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த அண்ணா பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் உறுப்பு கல்லூரிகளில் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 22ந்தேதி அன்று நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக்ம அறிவித்துஉள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள கஜா புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டன.

இதன் காரணமாக இன்று நடைபெற  தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நேற்று அறிவித்து இருந்தார். அதுபோல,   பாரதிதாசன், திருவள்ளுவர், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகங்களிலும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திலும், இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 22ந்தேதி நடைபெறும் என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'கஜா' காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் 22ந்தேதி நடைபெறும்: அண்ணா பல்கலை அறிவிப்பு, Adjourned examinations will be held on 22nd July: Anna University Announcement
-=-