டெல்லி:

நிர்வாகத் திறனில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடம் என்று மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இதற்கான புள்ளி விவரங்களையும் வெளியிட்டு உள்ளது. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் எந்தவொரு வளர்ச்சிப்பணிகளும் நடைபெறாமல், ஆட்சியாளர்கள், அதிகாரமட்டத்தினரால் தமிழகம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான மாறிய கதைப்போல நாளுக்கு நாள் சீரழிந்து வரும் நிலையில், மத்தியஅரசோ, தமிழகம்தான் நிர்வாகத்திறனில் நம்பர்-1 என்று கூறி உள்ளது….

தேசிய நல்லாட்சி தினத்தையொட்டி மத்திய நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப் பட்டியலில் தமிழகத்தின் பல்வேறு துறைகளின் செயல்பாடு அடிப்படையில் நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கிறது.

நாட்டிலேயே நிர்வாகத் திறனில் தமிழகம் 5.62 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.

2வது இடத்தை மகாராஷ்டிர மாநிலமும் (5.40 புள்ளிகள்), 3வது இடத்தை கர்நாடக மாநிலமும் (5.10 புள்ளிகள்) பிடித்துள்ளன.

அதுபோல,  18 பெரிய மாநிலங்கள் அடங்கிய பட்டியலில் பொருளாதார நிர்வாகத்தில் தமிழகத்துக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. அந்தப் பட்டியலில் பொது சுகாதாரத்தில் கேரளம் முதல் இடம் பிடித்துள்ளது. கர்நாடகத்துக்கு 3வது இடம், கேரளத்துக்கு 8வது இடம், தெலங்கானத்துக்கு 11வது இடமும் கிடைத்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, நீதி, உள்கட்டமைப்பு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. பொதுசுகாதாரத்தில் 2வது இடத்தையும், சுற்றுச்சூழலில் 3வது இடத்தையும், வேளாண்மையில் 9வது இடத்தையும், வணிகத்தில் 14வது இடத்திலும், சமூக நலனில் 7வது இடத்திலும்  உள்ளது.

இந்த தகவல்களை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது.