கூட்டணி வேண்டும் என்று அதிமுக தான் கெஞ்சுகிறது: தேமுதிக சுதிஷ் பேச்சால் கூட்டணிக்குள் பரபரப்பு

ஆரணி: கூட்டணிக்காக அதிமுக தான் கெஞ்சுகிறது என்று தேமுதிகவின்  எல்.கே.சுதீஷ் பேச்சால் அதிமுக கூட்டணிக்குள் பரபரப்பு எழுந்து உள்ளது.

சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தேமுதிக உடனான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

இந் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற தேமுதிக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில்  எல்.கே.சுதிஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தலில் கூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை. அதிமுக தான் கெஞ்சுகிறது.

2016ம் ஆண்டு தேர்தலில் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் இன்று அக்கட்சியே இருந்திருக்காது. மாநிலங்களவை இடத்திற்காக நாம் ஆசைப்படவில்லை என்று பேசி உள்ளார். அவரின் இந்த  பேச்சு அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பை கிளப்பியுள்ளது.