5தொகுதிகளை வாங்க அ.தி.மு.க.வுடன் மல்லுக்கட்டும் பா.ஜ.க.

ரட்டை இலக்க தொகுதிகளை கோரிய பா.ஜ.க.வுக்கு 5 இடங்களை மட்டும் அ.தி.மு.க. ஒதுக்கியுள்ளது.

இந்த 5 தொகுதிகளை இனம் காண்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

கன்னியாகுமரி மற்றும் கோவை ஆகிய இரு தொகுதிகள் பா.ஜ.க.வுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்- மற்ற 3 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிக்கிறது.

தென் சென்னை தொகுதியை பெறுவதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது ஆனால் அது அ.தி.மு.க.சிட்டிங் எம்.பி. ஜெயவர்தன் தொகுதி என்பதால் –அதனை விட்டுத்தர அ.தி.மு.க.மறுத்து விட்டது. தென் சென்னைக்கு பதிலாக வட சென்னை தொகுதியை தர முன் வந்துள்ளது –அ.தி.மு.க. அங்கே தங்களுக்கு அடித்தளம் இல்லை என்று  கூறி அந்த தொகுதியை ஏற்க பா.ஜ.க மறுத்து விட்டது.

நெல்லை தொகுதியில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை நிறுத்த பா.ஜ.க.விரும்புகிறது. ஆனால் அதனை விட்டுத்தர அ.தி.மு.க.விரும்பவில்லை.

நெல்லை கிடையாது –அதற்கு பதிலாக ராமநாதபுரம் தருகிறோம் என்கிறது அ.தி.மு.க.

இப்படி இழுபறி நீடிக்கும் நிலையில்-

இரண்டு வேட்பாளர்களை பா.ஜ.க.இறுதி செய்துள்ளது. ஒருவர் –பொன்.ராதா கிருஷ்ணன். கன்னியாகுமரி. இன்னொருவர்-சி.பி.ராதாகிருஷ்ணன். கோவை.

.–பாப்பாங்குளம் பாரதி