ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் மூத்த தலைவர் மதுசூதனனுக்கு கார் பரிசு: முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் வழங்கினர்

சென்னை:

71-வது பிறந்தநாளையொட்டி,ராயப்பேட்டையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


இதில் அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக மூத்த தலைவர் மசூதனனுக்கு முதல்வரும், துணை முதல்வரும் கார் பரிசளித்தனர்.

மேலும் 71 கிலோ எடை கொண்ட கேக்கை வெடி, முதல்வரும் துணை முதல்வரும் ஊட்டிக் கொண்டனர். ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட திரண்டிருந்த கட்சித் தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Jayalalitha  birthday celebration, ஜெயலலிதா பிறந்தநாள், துணை முதல்வர், முதல்வர்
-=-