தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும்: டிடிவி தினகரன்

விழுப்புரம்:

க்கள் சந்திப்பு பிரசார பயணம் மேற்கொண்டு வரும் டிடிவி தினகரன், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்  விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். 4 நாட்கள் அந்த மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிடிவி அங்குள்ள கிராமங்களுக்கெல்லாம் சென்று மக்கள் ஆதரவை கோரி வருகிறார்.

இன்று 3வது நாளாக ரிஷிவந்தியம் பகுதியில் பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு பொதுமக்கள் மத்தியில் டிடிவி,  கட்சியின் பெயரும், இரட்டை இலை சின்னமும் துரோகிகளின் கையில் உள்ளது. மத்திய அரசுடன் போராடி பல்வேறு நலத்திட்டங்களை ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்தார். ஆனால் அவரது மறைவுக்கு பின் அவரின் பெயரை சொல்லி ஆட்சியாளர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரைச் சொல்லி இரட்டை இலை சின்னத்தைக் காட்டி தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கின்றனர். ஆனால்,   பாராளுமன்ற தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும். தேர்தல் முடிந்தவுடன் இந்த ஆட்சியும் முடிவுக்கு வந்து விடும்.

இவ்வாறு பேசினார்.

கார்ட்டூன் கேலரி