அதிமுக அழிந்துவிட்டது- மத்திய அமைச்சர் பொன்.ரா கருத்து!

சென்னை: 

அதிமுக அழிந்துவிட்டதாகவும், திமுக  கொஞ்சம் கொஞ்சமாக  அழிந்து கொண்டிருப்பதாகவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

திராவிடக் கட்சிகள் அழியும் நிலையில் இருப்பதால், மக்கள் புதிய தேடலைத் தொடங்கியுள்ளனர்.  மக்களின் அந்த தேடல் நிச்சயம் பாஜகவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்தார்.  நீட் தேர்வால் மாணவர்களுக்கு நன்மையே ஏற்படும் என்று கூறிய அவர்,

கல்வியைப் பற்றி தமிழக அரசுக்குக் கவலையில்லை என்பதால்தான், நீட் தேர்வை வேண்டாம் என்று கூறுவதாகவும் குற்றம்சாட்டினார்.