அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று

சென்னை

திமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக முக்கிய பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அதையடுத்து நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர் உடனடியாக கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோகுல இந்திரா அதிமுக தலைமை அலுவலகத்தில் 7 ஆம் தேதி நடந்த முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

எனவே அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றவர்கள் கலக்கம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.