பொதுக்குழு தீர்மானம்: தேர்தல் கமிஷனில் டிடிவி அணி புதிய மனு

டில்லி,

மீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் செல்லாது என்று டிடிவி தரப்பினர் தலைமை தேர்தல் கமிஷனில் மனு கொடுத்துள்ளனர்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக, எடப்பாடி தலைமையிலான அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் மற்றும் அவரத ஆதரவு எம்எல்ஏக்கள் கவர்னரை சந்தித்து, எடப்பாடியை  முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோடி கடிதம் கொடுத்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 12ந்தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை எடப்பாடி தலைமையில் கூடியது. அதில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கு வதாகவும், இனிமேல் பொதுச்செயலாளர் பதவி என்பதே கிடையாது அதற்காக அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்படும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்கள் குறித்து, டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில் சமர்பித்து, இரட்டை இலையை மீட்க தீர்மானித்திருந்தனர். இதற்காக இன்று மூத்த தலைவர்கள் டில்லி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் அணியினர் புதிய மனு அளித்துள்ளனர். அதில், எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், பொதுக்குழுவை கூட்டிக்கொள்ளலாம், ஆனால் அதன் முடிவுகள், நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

‘இதன் காரணமாக எடப்பாடி அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் அமைச்சர்கள் கூட்டத்தில் இதுகுறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.