சென்னை

திமுக என்பது கழகம் கிடையாது என பாஜக தலைவர் இல கணேசன் கூறி உள்ளார்.

பாஜகவினர் கழகங்கள் இல்லாத தமிழகம் அமைப்போம் என தொடர்ந்து கூறி வந்தனர்.   அதே நேரத்தில் தற்போது அதிமுக உடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளனர்.  இதற்கு பலரும் கடும் விமர்சனம் எழுப்பி உள்ளனர்.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், “நாங்கள் கழகங்கள் இல்லாத தமிழகம் என சொன்னதில் அதிமுக சேர்க்கப்படவில்லை.  ஏனெனில் அதிமுக என்பது கழகம் கிடையாது” என கூறி உள்ளார்.

அதிமுக என்பதன் முழுவடிவம் அண்ணா திராவிட முன்னேற்ற ‘கழகம்’ என்பது குறிப்பிடத்தக்கது.   பெயரிலேயே கழகத்தை கொண்ட ஒரு கட்சியை பாஜக மூத்த தலைவர் கழகம் கிடையாது என கூறியது சர்ச்சையைஒ கிளப்பி உள்ளது.