சென்னை: 

தி.மு.க. வினர் மற்றும் கூட்டணி கட்சியினரின் வீடுகளில் பணத்தை வைப்பதும், அதுகுறித்து தேர்தல் ஆணையர்களுக்கு தகவல் தெரிவிப்பதும் அதிமுக கட்சிதான் என்று   தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்து வேல்முருகன் இன்று சேலத் தில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,. அதிமுக-வினரே திமுக கூட்டணி நிர்வாகிகள் இடத்தில் பணத்தை பதுக்கி வைத்து விட்டு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் அதிகாரிகளை கொண்டு ரெய்டு நடத்தி போலியான அவப்பெயரை அரங்கேற்றி வருகின்றனர்.

காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் உதவியோடு அரசு அதிகாரிகள் வாகனங்களில் ஆளும் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்கின்றனர் என்று குற்றம் சாட்டியவர், முதல்வர் உறவினர் வீடுகளில் எங்கெங்கு பணம் உள்ளது என்பதை பற்றிய தகவலை கொடுக்க நான் தயார் சோதனையிட தேர்தல் ஆணையம் தயாரா? என கேள்வி  எழுப்பினார்.

இந்திய அரசு தேர்தல் ஆணையம் தமிழக அரசு மூன்றும் கூட்டு செய்து திமுக கூட்டணியை ஒழிக்க பார்க்கிறது, மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும் தமிழக மக்களுக்கு எதிராக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த துடிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்பவுமே இந்த கூட்டணி.

இவ்வாறு அவர் கூறினார்.