தேர்தலில் போட்டியிடும் திருநங்கை : வீட்டை காலி செய்ய சொன்ன அதிமுக பிரமுகர்

சென்னை

க்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதால் திருநங்கை ராதாவை விட்டு சொந்தகாரரான அதிமுக பிரமுகர் வீட்டை காலி செய்ய சொல்லி உள்ளார்.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒரே ஒரு திருநங்கை மட்டுமே உள்ளார்.  அவர் தென் சென்னை தொகுதியில் போட்டி இடும் ராதா ஆவார்.   இவர் திருநங்கைகளின் துயர் குறித்து மக்களுக்கு அறியச் செய்யவே தேர்தலில் போட்டி இடுவதாக தெரிவித்துள்ளார்.   மைலாப்பூர் மற்றும் மந்தைவெளி பகுதியில் இவர் வாக்கு சேகரிக்க சென்றபோது நல்ல வரவேற்பு இருந்துள்ளது.

சுயேச்சை வேட்பாளர் ராதா,  ”நான் ஆங்கிலத்தில் பட்டமேற்படிப்பு படித்து இருக்கிறேன்.  ஆனாலும் எனக்கு யாரும் பணி அளிக்கவில்லை.  அதனால் நான் வீட்டு வேலைகள் செய்து வருகிறேன்.   நான் மந்தைவெளியில் பி எஸ் என் எல் எக்ஸ்சேஞ்ச் அருகில் ஒரு வாடகை வீட்டில் கடந்த மூன்று வருடங்களாக வசித்து வருகிறேன்.

எனது வீட்டு சொந்தக்காரர் அதிமுக கட்சியை சேர்ந்த பிரமுகர் ஆவார்.  நான் தேர்தலில் போட்டியிட மனு அளித்தமைக்காக அவர் என்னிடம் அதிருப்தி அடைந்துள்ளார்.  நான் தேர்தலில் போட்டியிடுவதால் என்னை வீட்டை காலி செய்யுமாறு சொல்லி உள்ளார்.   என்னைப் போல் திருநங்கைகளுக்கு வேலை மட்டுமின்றி வீடு கிடைப்பதும் மிகவும் கடினமான ஒன்றாகும்.

எங்களுடைய துயரங்களை மக்கள் அறியச் செய்யவே நான் சுயேச்சையாக தேர்தலில் போட்டி இடுகிறேன்.   எங்களை ஒதுக்கி வைப்பவர் மத்தியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எங்களுக்கு திருநங்கை என பெயர் சூட்டினார்.  அது முதல் எங்களுக்கு அவர் மீது தனி மரியாதை உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.