சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில், மக்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டு வந்த அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்த நிலையில்,  தேர்தல் அறிக்கையை தயாரித்த குழுவின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் பொன்னையன், அதிமுக தலைமை அலுவலகத்தில்,  முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் சமர்ப்பித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும்  அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக, அதிமுக இரு கட்சிகளும், தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டி வருகிறது. இதற்காக தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் பிரச்சாரக்குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு என பல குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

அதிமுக சார்பில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும்  குழு அமைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக இந்த குழுவினர்ல தீவிரமாக பணியாற்றி தேர்தல் அறிக்கை தயாரித்து வந்தனர்.

இதற்கான பணிகள் முடிவடைந்து, தேர்தல் அறிக்கை தயாரானதை தொடர்ந்து, அதை இறுதி படுத்தும் வகையில், ன்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தேர்தல் அறிக்கையை ஒப்படைக்கப்பட்டது.

இந்த தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையில், முக்கியமான பிரச்சனைகளை அறிந்து, அதற்கேற்பவும்,  விவசாயிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது..