சாலையில் மது அருந்தியதை தடுத்த காவலருக்கு அடி உதை : அதிமுக பிரமுகர் கைது

சென்னை

வேளச்சேரி பகுதியில் சாலையில் மது அருந்தியதை தடுத்த காவலரை அடித்து உதைத்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரியில் வீட்டு வசதி குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.   இந்தப் பகுதியில் நேற்று முன் தினம் மாலை வேளச்சேரி காவல் நிலைய காவலர் சினிவாசன் ரோந்திப் பணியில் ஈடுபட்டிருந்தார்.   அந்த பகுதியில் சாலையில் மூவர் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர்.   இதைக் கண்ட சீனிவாசன் அவர்களை தடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த மூவரில் அந்தப் பகுதி அதிமுக பிரமுகர் மலைமேகு (வயது 44) என்பவரும் ஒருவர் ஆவார்.    அவரைத் தவிர மற்ற இருவரும் காவலரின் எச்சரிக்கையை ஒட்டி அங்கிருந்து சென்று விட்டனர்.   ஆனல் மலைமேகு காவலர் சீனிவாசனுடன் கடும் வாக்குவாதத்தில் இறங்கி உள்ளார்.

அத்துடன் சீனிவாசனின் சட்டையைப் பிடித்து இழுத்து சரமாரியக அடித்து உதைத்துள்ளார்.  இது குறித்து அளிக்கப்ப்பட்ட புகாரின் பேரில் அதிமுக பிரமுகர் மலைமேகு கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.