அதிமுக குழப்பம்: பாஜக திருவிளையாடல்!: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

 

சென்னை:

அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு பாஜகவின் திருவிளையாடலே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்க திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “யார் முதல்வர் என்பதை அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அது அவர்கள் உட்கட்சி பிரச்சினை. அதில் காங்கிரஸ் தலையிடவிரும்பவில்லை” என்றார்.

மேலும், “அக் கட்சிக்குள் நடக்கும் குழப்பத்துக்குக் காரணம் மத்திய பாஜக அரசுதான்” என்று குற்றம்சாட்டினார்.