”இரட்டை இலை’’ சின்னத்தை முடக்க பா.ஜ.க. சதி செய்கிறதா? அமைச்சர் குற்றச்சாட்டால் பரபரப்பு..

”இரட்டை இலை’’ சின்னத்தை முடக்க பா.ஜ.க. சதி செய்கிறதா? அமைச்சர் குற்றச்சாட்டால் பரபரப்பு..
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அ.தி.மு.க. ஊழியர்கள் கூட்டத்தில் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர்,’’ எம்.ஜி.ஆர். வாரிசு எனப் பலர் இப்போது சொந்தம் கொண்டாடுகிறார்கள். எம்.ஜி.ஆரின் உண்மையான அரசியல் வாரிசு ‘இரட்டை இலை’ சின்னம் தான்’’ எனக் குறிப்பிட்டார்.
‘’ இரட்டை இலை சின்னத்துக்கு இப்போது மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தை முடக்க மிகப்பெரிய சதி நடக்கிறது’’ என அமைச்சர் சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டை. முன் வைத்தார்.
‘’ அ.தி.மு.க. கரை போட்ட வேட்டியை நாம் தொடர்ந்து கட்ட வேண்டும் என்றால் சட்டப்பேரவை தேர்தலில் வெல்வது முக்கியம்’’ என குறிப்பிட்ட அவர்’’ எனவே நம்மிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து உழைக்க வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.
”இரட்டை இலையை முடக்கும் விவகாரத்தில் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. மீது சந்தேகப்படுகிறீர்களா?’’ என அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் கேட்டபோது ,’’ அரசியலில் ஆதாயம் அடைவதற்காகக் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் எந்த ஒரு எல்லைக்கும் செல்வார்கள்’’ எனப் பதில் அளித்தார்.
‘’இதற்கு ஏற்கனவே முன் உதாரணங்கள் உள்ளன’’ எனக் குறிப்பிட்ட சண்முகம்’’ எனவே அ.தி.மு.க.வை கட்டிக்காக்க வேண்டியது, எங்களின் கடமை’’ எனத் தெரிவித்தார்.
பா.பாரதி.