Random image

வேறு பெண்ணுடன் எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு 12ந்தேதி திருமணம்: உறவினர்கள் தகவல்

சென்னை:

ரோடு பவானிசாகர் அதிமுக எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த பெண், வயது வித்தியாசம் காரணமாக தலைமறைவானார். இந்த நிலையில், திட்டமிட்டபடி வரும் 12ந்தேதி எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ. ஈஸ்வரன். வயது 43. இவருக்கும், கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (வயது 23) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகிற 12-ம் தேதி முதல்வர் எடப்பாடி தலைமையில் திருமணம் நடைபெறும்எ ன அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், , மணமகள் சந்தியா திடீரென மாயமாகி விட்டார். இருவருக்கும் இடையே சுமார் 20 வயது வித்தியாசம் காரணம் என்றும், மணப்பெண் வேறொருவரை காதலித்ததாகவும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், பவானிசாகர் தொகுதி எம்எல்ஏவின் திருமணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், ஏற்கனவே குறித்த 12ந்தேதி அவரது திருமணம் வேறொரு பெண்ணுடன் நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.